வியாழன், 30 ஜனவரி, 2014

Tags

ஹன்சிகாவின் 25வது குழந்தை


தனது 25வது குழந்தையை தத்தெடுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 24 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் முழு படிப்பு செலவையும் கவனித்து வருகிறார்.

இப்போது 25வது குழந்தையாக புனேயில் 8வது படிக்கும் சிறுவன் ஒருவனை தத்து எடுத்துள்ளார். அவன் பெற்றோர் சண்டை போட்டு பிரிந்து விட்டனர்.
தந்தையின் தங்கை பராமரிப்பில் அச்சிறுவன் வளர்ந்தான். தற்போது அப் பெண்ணை புற்று நோய் தாக்கியுள்ளது. இதனால் மாணவனால் படிப்பை தொடர முடியவில்லை.

இந்த பரிதாப கதையை கேள்வியுற்ற ஹன்சிகா அந்த சிறுவனை படிக்க வைப்பதாக தத்து எடுத்துக் கொண்டார்.

0 கருத்துகள்:

Blogger Template by Clairvo