வியாழன், 30 ஜனவரி, 2014

Tags

‘ஐ’ படத்தை தவறவிட்ட ஜீவா


‘ஐ’ படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம் ஜீவா.
சமீபத்தில் வெளியான ‘என்னென்றும் புன்னகை’ படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஜீவா.

இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘யான்’. இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஜீவா அளித்த பேட்டி ஒன்றில் ங்கரின் ‘ஐ’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் தனக்கு வந்ததாகவும் அதை தான் தவர விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘நண்பன்’ படம் முடிவந்தவுடன் ஷங்கர் சார் ‘ஐ’ படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார்
.
பின்னர் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டது. ஷங்கர் சார் உடனே என்னை தொடர்பு கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் நடிக்க இயலாமல் போய் விட்டது.
பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்க்கு சென்றது என கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

Blogger Template by Clairvo