வியாழன், 30 ஜனவரி, 2014

பல்லாக்கு தேவதை நயன்தாரா


பல்லாக்கு தேவதை என்று தொடங்கும் அந்த பாடலில் கானா தன்மை வெளிப்படாத வகையில், கிராமிய மணத்துடன் இசையமைத்துள்ளாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.
சமீபகாலமாக கானா பாடல்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்களுக்கு இது புதிய எனர்ஜியையும், புதிய டேஸ்டையும் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இந்த பல்லாக்கு தேவதை நயன்தாராவை அழகாக வர்ணிக்கும் பாடல் என்பதால் மாடர்ன் டிரஸ் என்பதில் இருந்து விடுபட்டு, பாவாடை தாவணியில் நயன்தாராவை அழகுமிளிர கிராமத்து தேவதையாக காண்பித்திருக்கிறார்களாம்.

அந்த காட்சியை டோட்டல் யூனிட்டே பார்த்து கிறங்கிப்போனதோடு, படமாக்கி முடித்ததும் மானிட்டரில் தனது அழகைப்பார்த்து நயன்தாராவும் அசந்துபோய் நின்றாராம்.

கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி


பார்த்திபன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
வித்தகன் படத்தினை தொடர்ந்து ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்ற வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுதவிர விஜய்சேதுபதி ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

மேலும் சினிமா பற்றிய கதை என்பதால் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலி சோடாவைக் கண்டு மிரண்ட சமந்தா


தமிழ்சினிமாவின் வழக்கமான இலக்கணத்தை முறியடித்து தற்போது பல படங்கள் வரத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலி சோடா படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
பெரிய ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் சிறுவர்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரையுலகினர் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இத்திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை சமந்தா, இப்படத்தில் கண்ணாடி அணிந்து ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணின் நடிப்பு தன்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் அப்பெண்ணை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கவேண்டும் எனவும் தனது டவிட்டர் தளத்தில்  டிவிட்டியுள்ளார்

ஹன்சிகாவின் 25வது குழந்தை


தனது 25வது குழந்தையை தத்தெடுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 24 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் முழு படிப்பு செலவையும் கவனித்து வருகிறார்.

இப்போது 25வது குழந்தையாக புனேயில் 8வது படிக்கும் சிறுவன் ஒருவனை தத்து எடுத்துள்ளார். அவன் பெற்றோர் சண்டை போட்டு பிரிந்து விட்டனர்.
தந்தையின் தங்கை பராமரிப்பில் அச்சிறுவன் வளர்ந்தான். தற்போது அப் பெண்ணை புற்று நோய் தாக்கியுள்ளது. இதனால் மாணவனால் படிப்பை தொடர முடியவில்லை.

இந்த பரிதாப கதையை கேள்வியுற்ற ஹன்சிகா அந்த சிறுவனை படிக்க வைப்பதாக தத்து எடுத்துக் கொண்டார்.

படபடப்பில் ஹன்சிகா படப்பிடிப்பில் சிம்பு


சத்தியமா சொல்றேன் நீயலாம் நல்ல வருவடா என்ற சந்தானம் சொன்ன டயலாக் தான் எனக்கு இப்போ ஞாபகத்துக்கு வருது.
எந்த சைடுலே இருந்து இந்த நியூஸ்சை அபேஸ் செய்தார்கள் தெரியவில்லை, பல பேரின் இதயத்தில் கனவுக் கன்னியாக குடியிருக்கும் கொழு கொழு நடிகை ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சியா “அய்ய கோ!” தாங்க முடியவில்லை என்று அலறுகிறார்கள் ரசிகர்கள்.
என்றும் இளமை என்றும் கடமை என்று வாழும் நமது ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சி என்று செய்தி வெளியாகி உள்ளது. இதற்காக ஹன்சிகா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தாராம்.

ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றதும், நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக விரைவில் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளாராம் ஹன்சிகா. இதை பற்றி கேள்வி பட்ட சிம்பு பட்டும் படாத மாதிரி படபிடிப்பில் நயன்தாராவிடம் ஜல்சா செய்து கொண்டு இருக்கிறார்.

‘ஐ’ படத்தை தவறவிட்ட ஜீவா


‘ஐ’ படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம் ஜீவா.
சமீபத்தில் வெளியான ‘என்னென்றும் புன்னகை’ படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஜீவா.

இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘யான்’. இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஜீவா அளித்த பேட்டி ஒன்றில் ங்கரின் ‘ஐ’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் தனக்கு வந்ததாகவும் அதை தான் தவர விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘நண்பன்’ படம் முடிவந்தவுடன் ஷங்கர் சார் ‘ஐ’ படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார்
.
பின்னர் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டது. ஷங்கர் சார் உடனே என்னை தொடர்பு கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் நடிக்க இயலாமல் போய் விட்டது.
பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்க்கு சென்றது என கூறியுள்ளார்.

Blogger Template by Clairvo